‘கரோனா தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்’

‘கரோனா தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்’
Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தல் குறித்து திருச்சியில் தமாகா நிர்வாகி களுடன் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியது: நடிகர் ரஜினிகாந்த் சட்டப்பேரவைத் தேர்தலில் நல்லவர்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று நினைக்கிறேன். சசிகலா வருகை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கரோனா தடுப்பூசி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது. மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது. எனவே, சுகாதார பிரச்சினையில் மக்களை எதிர்க் கட்சிகள் அச்சுறுத்த வேண்டாம்.

எலுமிச்சைப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால், அவை பறிக்கப்படாமல் மரத்தி லேயே அழுகி வருகின்றன. எனவே, விவசாயிகளுக்கு உதவும் வகை யில் அம்மா உணவகங்களில் எலுமிச்சை சாதம் வழங்குவதற்கு எலுமிச்சைப் பழங்களை விவசாயி களிடம் அரசு கொள்முதல் செய் வதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் புள்ளம் பாடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

அப்போது, கட்சியின் மாவட் டத் தலைவர்கள் டி.குணா, கே.செந்தில், கேவிஜி.ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in