பைக்காரா அருவிக்கு செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு? உதவி வனப் பாதுகாவலர் விசாரணை

பைக்காரா அருவிக்கு செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு? உதவி வனப் பாதுகாவலர் விசாரணை
Updated on
1 min read

பைக்காரா அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடுநடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் உதகை உதவி வனப் பாதுகாவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கரோனா ஊரடங்குக்குப் பின்னர் கடந்த டிசம்பர் மாதத்தில்பைக்காரா அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இங்கு, நுழைவுக் கட்டணம் வசூலிப்பது உட்பட இதரப் பணிகளில் சூழல் மேம்பாட்டுக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இங்கு 11 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களது செயல்பாடுகளை காலை, மாலை வேளைகளில் வனத் துறையினர் கண்காணிப்பர்.

இந்நிலையில், பைக்காரா அருவிக்கு செல்ல ரூ.10-ல் இருந்து ரூ. 20- ஆக நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த நுழைவுக் கட்டண ரசீது வழங்கும் இயந்திரம் மாற்றப்பட்டு, கடந்த 22-ம் தேதி புதிய இயந்திரம் வழங்கப்பட்டது. இங்கு பழைய இயந்திரமும் உபரி இயந்திரமாக வைக்கப்பட்டிருந்தது.ஆனால் பழைய இயந்திரத்தின் மூலமும் நுழைவுச்சீட்டு கொடுக்கப்படுவதாக புகார் வந்ததால், அங்கு திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சூழல் மேம்பாட்டுக் குழுவினர் வங்கியில் செலுத்தியிருந்த தொகைக்கும், வசூலிக்கப்பட்ட தொகைக்கும் ஒரே நாளில் ரூ.3,000 வித்தியாசம் இருந்ததுதெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சூழல் மேம்பாட்டுக் குழுவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in