கோகுல மக்கள் கட்சி மாநாடு
கோகுல மக்கள் கட்சி மாவட்ட மாநாடு திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாநில இளை ஞரணி செயலாளர் ராஜாராம், மாவட்டச் செயலாளர் கள் வீரப்பன், எழில் அரசன், வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் செந்தில்வேலன் வரவேற்றார்.
மாநாட்டில், தலைவர் சேகர் பேசும் போது, “கடந்த 1989-ல் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் 108 ஜாதிகளை சேர்த்த, அப்போதைய முதல்வர் கருணாநிதி, யாதவர்களை சேர்க்காமல் புறக்கணித்து விட்டார். யாதவ சமுதாய மக்களின் வாழ்வு மேம்பட, யாதவர்களுக்கு 16 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் 85 லட்சம் வாக் காளர்கள் உள்ளனர். 183 தொகுதி களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக யாதவர்கள் உள்ளனர்.
தனித்து போட்டியிட்டாலும் 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். நமது கட்சியின் சின்னம் புல்லாங்குழல். தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி யாதவர்களுக்கு 16 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றார்.
