

புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட் சிப் பணியாளர்கள் நேற்று அகற் றினர்.
புதுக்கோட்டை நகரில் பெரிய வணிக நிறுவனங்கள் அமைந் துள்ள கீழ ராஜவீதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையர் (பொ) ஜெ.சுப்பிரமணியன் தலைமையி லான நகராட்சி பணியாளர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் வைக்கப்பட் டிருந்த விளம்பரப் பலகைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சிறு கடைகள் போன்ற ஆக்கிர மிப்புகளை அகற்றினர்.