மாணவர்கள் லட்சியத்துடன் படித்து பெற்றோரை மகிழ்விக்க வேண்டும் வள்ளியூர் பள்ளி விழாவில் அமைச்சர் ராஜலெட்சுமி அறிவுறுத்தல்

மாணவர்கள் லட்சியத்துடன் படித்து பெற்றோரை மகிழ்விக்க வேண்டும் வள்ளியூர் பள்ளி விழாவில் அமைச்சர் ராஜலெட்சுமி அறிவுறுத்தல்
Updated on
1 min read

வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 202 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை வகித்தார். எம்எல்ஏ க்கள் இன்பதுரை, நாராயணன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜலெட்சுமி இலவச சைக்கிள் களை வழங்கி பேசிய தாவது:

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ‘‘மாணவர்களை கனவு காணுங்கள் என்றும், தூங்கும் போது வருவதல்ல கனவு, உன்னை தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு’’ என்றும் கூறினார். மாணவ, மாணவிகளாகிய நீங்கள் உங்கள் கனவு நனவாக நல்லமுறையில் படிக்க வேண்டும். நீங்கள் உங்கள் லட்சியங்களை அடையும்போது உங்கள் பெற்றோர் மகிழ்ச்சியடைவார்கள். ஆசிரியருக்கும், பெற்றோருக் கும், உங்கள் கிராமத்துக்கும் நல்லபெயரை ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கணேசராஜா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நா.முருகன் ஆகியோர் பேசினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் வரவேற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in