கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் 30 கணினி பயிற்சியாளர்கள் தேர்வு இன்றும் நாளையும் கலந்தாய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் 30 கணினி பயிற்சியாளர்கள் தேர்வு இன்றும் நாளையும் கலந்தாய்வு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வித் துறையில் அரசு மற்றும் நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 30 கம்ப்யூட்டர் பயிற்சியாளர் நிலை-I பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பெறப்பட்ட பணி நாடுநர் பெயர் பட்டியலில் உள்ள பணி நாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாக இன்றும் நாளையும் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஆணை வழங்கப்படவுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத் திற்கான இந்த 30 காலிப் பணி யிடங்களுக்கான கலந்தாய்வு, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ஆசிரியர் தேர்வு வாரிய முன்னுரிமை எண் 1 முதல் 400 வரை உள்ளவர்களுக்கு இன்றும், 401 முதல் 742 வரை உள்ளவர்களுக்கு நாளையும் நடைபெறவுள்ளது.

எனவே 31-12-2020 அன்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள், அனைவரும் விழுப் புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in