ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் இன்று பிரச்சாரம் மதுரையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

மதுரை வந்த முதல்வர் பழனிசாமி நேற்று மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமியிடம் ஆசி பெற்றார். உடன் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ., ராஜ் சத்யன்.  (வலது) மதுரை வந்த முதல்வருக்கு அவனியாபுரத்தில் அளித்த வரவேற்பில் திரண்டிருந்த மக்கள் கூட்டம்.
மதுரை வந்த முதல்வர் பழனிசாமி நேற்று மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமியிடம் ஆசி பெற்றார். உடன் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ., ராஜ் சத்யன். (வலது) மதுரை வந்த முதல்வருக்கு அவனியாபுரத்தில் அளித்த வரவேற்பில் திரண்டிருந்த மக்கள் கூட்டம்.
Updated on
1 min read

தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் இரவு வரை 14 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். காலை 9 மணிக்கு பார்த்திபனூரில் உள்ள கே.எஸ்.டி. திருமண மஹாலில் அப்பகுதி முக்கியப் பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். அங்கிருந்து பரமக்குடி வரும் அவர் லேனா திருமண மஹாலில் அதிமுக பிரமுகர்களுடன் ஆலோசனை செய்கிறார். அதையடுத்து ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பரமக்குடி நகரின் முக்கியப் பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சத்திரக்குடியில் பிரச்சாரம் செய்கிறார்.

அங்கிருந்து ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள நிஷா மஹாலில் முதல்வர் மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து ராமநாதபுரம் டி பிளாக் பகுதியில் உள்ள ஏபிசி மஹால் மற்றும் அம்மா பூங்கா அருகே உள்ள ஜி.எஸ்.மஹாலில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதன் பிறகு ராம நாதபுரம்-ராமேசுவரம் சாலையில் வாணி அருகே ஏஒன் மஹாலில் பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்பப் பிரிவினருடன் பேசுகிறார்.

பின்னர் கீழக்கரை செல்லும் முதல்வர் பழனிசாமி, முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்துப் பேசுகிறார். மாலை 6 மணிக்கு மேல் கடலாடி செல் லும் முதல்வர் அங்குள்ள தேவர் மஹாலில் அதிமுக பொறுப் பாளர்களை சந்தித்துப் பேசுகிறார். அங்கிருந்து சாயல்குடி சென்று பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவு 7.15 மணிக்கு நரிப்பையூரில் ஜெபமாலை மாதா கல்யாண மஹாலில் முக்கியப் பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். இறுதியில் கன்னிராஜபுரத்தில் உள்ள தியாகி தர்மக்கன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பனை வெல்லத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

அதிமுக மாவட்டச் செயலர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் முதல்வரை வரவேற்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

மதுரை

வரவேற்பு முடிந்த பிறகு முதல்வர் கே.பழனிசாமி மதுரை தல்லாகுளத்தில் உள்ள தனியார் விருந்தினர் இல்லத்தில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை அவர் ராமநாதபுரம் செல்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in