ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு ஈரோடு, நாமக்கல்லில் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு கொடிவேரி, பவானிசாகரில் பயணிகளுக்குத் தடை

புத்தாண்டையொட்டி நேற்று ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அடுத்தபடம்: ஈரோடு ரயில்வே காலனி சித்தி விநாயகர் கோயிலில் உள்ள சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடைசிபடம்: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி ஈரோடு பெரியமாரியம்மன், பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கொடிவேரி தடுப்பணை, பவானிசாகர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நேற்று காலை முதலே, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோயில் முன்புள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவியும், வேலில் எலுமிச்சை கனி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி, நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். இதே போல், ஈரோடு பெரியமாரியம்மன் கோயில், கோட்டை கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர் கோயில், திண்டல் வேலாயுதசுவாமி கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர் -வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சாயிபாபா கோயில்

நள்ளிரவு பிரார்த்தனை

கொடிவேரியில் தடை

நாமக்கல்லில் வழிபாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in