புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை, வழிபாடு கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் அலைமோதிய மக்கள்

திருச்செந்தூர் செந்திலாண்டவர்  கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
Updated on
1 min read

புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். இதுபோல் டவுன் புட்டாரத்தி அம்மன் கோயில், கரியமாணிக்க பெருமாள் கோயில், லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ் சாலைக்குமரன் கோயில், வண்ணார்பேட்டை பேராத்து செல்லி அம்மன் கோயில், குட்டத்துறை சுப்பிரமணியர் கோயில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், பேட்டை பால்வண்ணநாதர் கோயில், முத்தாரம்மன் கோயில், தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவிலும், காலையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி பங்கேற்று பிரார்த்தனை செய்தார். இதுபோல் சீவலப்பேரி சாலையிலுள்ள அந்தோனியார் ஆலயம், கல்வெட்டான்குழி அந்தோனியார் திருத்தலம், சாந்திநகர் குழந்தை ஏசு ஆலயம், திசையன்விளை ஏசு ஆலயம், தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தலம், வள்ளியூர் தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் நள்ளிரவில் நன்றி வழிபாடும், அதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரையும் நடைபெற்றன.

நாகர்கோவில்

நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருமலை தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள், வேளிமலை குமாரசுவாமி கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தென்காசி

இதேபோல், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில், இலஞ்சி குமாரர் கோயில், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் உட்படபல்வேறு கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

மேலும், சொக்கன்குடியிருப்பு மணல் மாதா தேவாலயம், தூத்துக்குடி தூய அந்தோனியார் ஆலயம், யூதா ததேயு ஆலயம், மிக்கேல் அதிதூதர் ஆலயம், வேளாங்கண்ணி மாதா தேவாலயம், வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயம், ஆலந்தலை, அமலிநகர், மணப்பாடு போன்ற இடங்களில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

நாசரேத் தூய யோவான் தேவாலயத்தில் பேராயர் தேவசகாயம் தலைமையில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு ஆராதனையில் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிஎஸ்ஐ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

திருச்செந்தூர்

இதேபோல் தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில், வேம்படி இசக்கியம்மன் கோயில், பால விநாயகர் கோயில், புன்னையடி வனத்திருப்பதி கோயில், ஆறுமுகநேரி சோம சுந்தரி அம்மன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது.

கோவில்பட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in