வேலூரில் 9 மாதங்களுக்கு பிறகு கோட்டையில் அதிகளவில் திரண்ட பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை கூட்டம்

ஆங்கில புத்தாண்டையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஜலகண்டேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  அடுத்த படம்: சிறப்பு அலங்காரத்தில் அகிலாண்டேஸ்வரி அம்மன்.  கடைசிப் படம்:  கோயிலில் பொதுமக்கள் குவிந்ததால் தடுப்பு அமைத்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். படங்கள்: வி.எம்.மணிநாதன்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஜலகண்டேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அடுத்த படம்: சிறப்பு அலங்காரத்தில் அகிலாண்டேஸ்வரி அம்மன். கடைசிப் படம்: கோயிலில் பொதுமக்கள் குவிந்ததால் தடுப்பு அமைத்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். படங்கள்: வி.எம்.மணிநாதன்.
Updated on
2 min read

ஆஎங்கில புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில் 9 மாதங் களுக்குப் பிறகு அதிகளவிலான பொதுமக்கள் திரண்டனர். கோட்டை கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் கோட்டை மூடப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கோட்டைக்கு சென்று சுற்றிப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஊரடங்கு தளர்வு படிப்படியாக அறிவிக்கப் பட்ட நிலையில், கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் அரசு அருங் காட்சியகத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரம், கோட்டை கொத்தளம், மதிற்சுவர் பகுதியில் சுற்றிப் பார்க்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட வில்லை. இதனால், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் வேலூர் கோட்டை வெறிச்சோடியே காணப்பட்டது.

ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக சுற்றுலாத் தலங்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. அதனடிப்படையில், வேலூர் கோட்டைக்கு சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்றனர். ஆனால், கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நேற்று அதிகமாக இருந்தது. கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத் திருந்து சுவாமி தரிசனம் செய்த னர். அதேபோல், அரசு அருங்காட் சியகத்திலும் சுற்றுலாப் பயணி களின் வருகை அதிகமாக இருந் தது. அதேபோல், வேலூர் கோட்டை யில் 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று குதிரை சவாரி களைகட்டியது. குதிரை சவாரியிலும், குதிரை பூட் டப்பட்ட வண்டிகளில் சென்று பொது மக்கள் மகிழ்ந்தனர். கோட்டைக்கு வெளியே உள்ள பூங்காவிலும் அதிகளவில் திரண்டனர்.

கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள பெரியார் பூங்கா, அமிர்தி வன உயிரியில் பூங்கா, சிங்கிரி கோயில், பாலமதி முருகன் கோயில், ரத்தினகிரி பாலமுருகன் கோயில், வள்ளிமலை முருகன் கோயில்களிலும் அதிகளவிலான கூட்டம் காணப்பட்டது.

அதேபோல், வேலூர் சிஎஸ்ஐ மத்திய தேவாலயம் உள்ளிட்ட ஏராளமான தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த் தனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன் புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

திருப்பத்தூர்

ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை பின்பற்றி கோயில்களுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல, மாவட்டத்தில் உள்ள முக்கிய தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை, வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் எஸ்பி விஜயகுமார் தலைமையில், 800-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப் புப்பணிகளில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in