திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளுக்கு செல்ல ஜன. 3 வரை தடை

திருவள்ளூர் மாவட்டத்தில்   நீர் நிலைகளுக்கு செல்ல ஜன. 3 வரை தடை
Updated on
1 min read

திருவள்ளூர் ஆட்சியரின் செய்திக்குறிப்பு: சமீபத்திய கனமழையால் முக்கிய ஏரிகளில் நீர் நிரம்பிஉள்ளன.

ஆகவே, இந்த ஏரிகளில் பொதுமக்கள் கூடுவது, ஆபத்தான வகையில் குளிப்பது, விளையாடுவது மற்றும் படகுப் போக்குவரத்து செல்வது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளிலும், ஊத்துக்கோட்டை தரைப்பாலம், பெரியபாளையம் பாலம்,தாமரைப்பாக்கம் தடுப்பணை, பழவேற்காடு ஏரி மற்றும் கடற்கரைஉள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளுக்கும் வரும் 3-ம் தேதிவரை பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை.மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in