வள்ளலார் அருள்மாளிகை சார்பில் விழுப்புரத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்

விழுப்புரத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை வளாகத்தில், நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வள்ளலார் சன்மார்க்க அன்பர்கள் மாவட்ட சித்த மருத்துவமனையுடன் இணைந்து இலவச சித்தமருத்துவ முகாம் நடத்தினர்.

இம்முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாலா தலைமையில் மருத்துவர்கள் நித்தியகுமாரி, புவனாம்பிகா, ரமேஷ்பாபு, அப்பாஸ் அலி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் 100-க்கும் மேற்பட் டோருக்கு ஆலோசனைகள் வழங்கி சிகிச்சை அளித் தனர்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெய அண்ணாமலை, கலியபெருமாள் உள்ளிட்ட வள்ளலார் அருள் மாளிகை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in