ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் சமையலர், துப்புரவாளர் பணிக் காலியிடம்

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் சமையலர், துப்புரவாளர் பணிக் காலியிடம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு, 33 (ஆண்-25, பெண்-8) சமையலர் பணியிடங்கள், 4 (ஆண்-2, பெண்-2) பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்கள் பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்துக்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும். 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத் தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in