விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காவலர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க நடவடிக்கை திருப்பத்தூர் எஸ்பி டாக்டர் விஜயகுமார் தகவல்

கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற திருப்பத்தூர் காவலர் அணியினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்த எஸ்பி டாக்டர் விஜயகுமார்.
கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற திருப்பத்தூர் காவலர் அணியினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்த எஸ்பி டாக்டர் விஜயகுமார்.
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் காவலர்கள் விளையாட்டுப்போட் டிகளில் தனித்திறனை வெளிப் படுத்த கூடுதல் பயிற்சிகள் அளிக்கப் படும் என எஸ்பி விஜயகுமார் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங் காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெத்தூர் பகுதியில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் கடந்த 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற்றன. இதில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ் ணகிரி, தருமபுரி, சேலம், தி.மலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளை யாடினர்.

இதில், திருப்பத்தூர் மாவட்ட காவலர்கள் முதல் பரிசினை தட்டிச் சென்றனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் முதல் பரிசு பெற்ற காவலர் அணியினருக்கு வெகுமதிஅளித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜய குமார் பாராட்டு தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, காவல் துறை சார்பில் பல்வேறு விளையாட்டுப்போட்டி கள் நடத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.

அந்தப்போட்டிகளில், பொது மக்களுடன் திருப்பத்தூர் மாவட்ட காவல் அணியினர் பங்கேற்பார் கள். அதற்காக, ஒவ்வொரு போட் டிக்கும் தனி அணி உருவாக்கப் படும். போட்டியில் காவல் துறை அணியினர் தனித்திறனை வெளிப் படுத்த கூடுதல் பயிற்சி அளிக்கப் படும். மாவட்ட காவல் துறை சார்பில் விளையாட்டுப்போட்டிக்கான பயிற்சிகள் ஆயுதப்படை மைதானத்தில் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். கபடி, கூடைப்பந்து, கையுந்துப் பந்து, கால்பந்து, தடகளம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டி களுக்கு சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு காவல் அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது, திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு, எஸ்பி காவல் ஆய்வாளர் பழனி, உதவி காவல் ஆய்வாளர் அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in