மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று சிறப்பு மருத்துவ முகாம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் இன்று(31-ம் தேதி) மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் வட்டார வளமையம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் இன்று (31-ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள், உதவி உபகரணங்கள், இலவச பயண போக்குவரத்து அட்டை மற்றும் இதர மாற்றுத் திறனாளிக்கான அரசு நலத்திட்டங்கள் பெறலாம். இதற்கு குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும். இம்முகாமில் கலந்து கொள் பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in