கிருஷ்ணகிரியில் 2-ம் போக நெல் நடவுக்காக ஏர் உழவு மூலம் நிலத்தை சீர் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி கிராமத்தில் 2-ம் போக நெல்நடவுக்காக கால்நடைகள் உதவியுடன் நிலத்தை சீர் செய்யும் விவசாயி.
கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி கிராமத்தில் 2-ம் போக நெல்நடவுக்காக கால்நடைகள் உதவியுடன் நிலத்தை சீர் செய்யும் விவசாயி.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றுப் பாசனம் முலம் ஆயிரக்கணக் கான ஏக்கரில் நெல் நடவினை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். தற்போது 2-ம் போக நெல் சாகுபடி மேற்கொள்வதற்காக, கிருஷ்ணகிரி அணை மற்றும் பாரூர் ஏரியில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. இந்நிலையில் நெல் நடவு மேற்கொள்வதற்காக நிலங்களைச் சீரமைக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மாதேப் பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு மேற்கொள்கிறோம்.

ஆற்றங்கரையோரம் நிலங்கள் உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். இதனால் நெல் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் தடையின்றி கிடைக்கிறது. கடந்த காலங்களை போல் எங்கள் பகுதியில் கால்நடைகள் உதவியுடன் தான் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். காலப்போக்கில், உழவு முதல் அறுவடை வரை அனைத்து பணிகளுக்கும் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இருப்பினும் நாங்கள் பழமை மாறாமல் இன்றும் நிலத்துக்கு தேவையான அடி உரத்துக்கு இலை, தழைகளை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in