மாவட்ட அளவிலான மூவர் கைப்பந்து போட்டி தருவைகுளம் அரசு பள்ளி வெற்றி

படர்ந்தபுளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மூவர் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தருவைக்குளம் அரசு பள்ளி மாணவர்கள்.
படர்ந்தபுளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மூவர் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தருவைக்குளம் அரசு பள்ளி மாணவர்கள்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் படர்ந்தபுளிலியா கைப்பந்து கழகம் சார்பில்17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான மூவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. 12 அணிகள் கலந்துகொண்டன. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி 2- 0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றது.

தூத்துக்குடி வஉசி துறைமுக சபை கைப்பந்து வீரர்கள் குருசாமி, சீனிவாசன், இந்தியாவின் முதல் கடற்கரை வாலிபால் சர்வதேச நடுவர் சீனிவாசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

வெற்றி பெற்ற தருவைகுளம் அரசு பள்ளி மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிகாந்த், முத்துராஜன், பயிற்சியில் உதவிய ஸ்டாலின், ஜெயப்பிரகாஷ் மற்றும் ஞானப்பிரகாசம் ஆகியோரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்டோ ரூபன், உதவி தலைமை ஆசிரியர் மாரிப்பாண்டி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அமலதாசன் ஆகியோர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in