

காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியினர் தூத்துக்குடியில் காந்தி குல்லா அணிந்து ஊர்வலம் சென்றனர். தந்தி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தார். பழைய மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பழையமாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி, காமராஜர், வஉசி, குரூஸ் பர்னாந்து சிலைகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.சுடலையாண்டி, மாநில மீனவரணி பொதுச் செயலாளர் ரொனால்டு வில்லவராயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.