

திருவள்ளூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் ஆணைப்படி இம்மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட உயர் கல்விப் பயிலும், பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு செல்போன் வழங்கப்படவுள்ளன.
ஆகவே, தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், ஆதார் உள்ளிட்ட தகுந்த ஆவணங்களுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.