ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.2-ல் முதல்வர் பிரச்சாரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில்    ஜன.2-ல் முதல்வர் பிரச்சாரம்
Updated on
1 min read

வரும் ஜனவரி 2-ம் தேதி முதல்வர் பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

அதிமுக இணை ஒருங்கிணைப் பாளரும், முதல்வருமான பழனிசாமி ராமநாதபுரம் மாவட் டத்தில் ஜனவரி 2-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அன்று காலை 9 மணிக்கு பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பார்த்தி பனூரில் தனியார் மஹாலில் கால்நடை பராமரிப்பாளர்களைச் சந்தித்துப் பேசுவார். பின்னர் தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் வேளாண் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுடன் கலந்துரை யாடுவார். பின்னர் பரமக்குடி லேனா திருமண மஹாலில் நெசவாளர், சிறு வணிகர்களை சந்தித்துப் பேசுவார்.

பகல் 12 மணிக்குப் பிறகு ராமநாதபுரம் செல்லும் முதல்வர், பட்டணம்காத்தானில் மகளிர் சுய உதவிக் குழுவினர், ஜமாஅத் பிரமுகர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோரைசந்தித்துப் பேசுவார்.

அன்று மாலை திருப்புல்லாணி யில் மீனவர்களுடன் கலந்துரை யாடுவார். அங்கிருந்து கடலாடி செல்லும் அவர் கரி மூட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசுவார். பின்னர் சாயல்குடியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார். இரவு கன்னிராஜ புரத்தில் உள்ளூர் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

முதல்வருக்கு பார்த்திபனூர் முதல் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in