பிடிஓ தற்கொலை முயற்சிக்கு காரணமானோரை கைது செய்யக் கோரி உறவினர் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷின் உறவினர் பாலசுப்ரமணியன்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயன்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷின் உறவினர் பாலசுப்ரமணியன்.
Updated on
1 min read

வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலை முயற்சிக்கு காரணமானோரை கைதுசெய்ய வலியுறுத்தி, அவரது உறவினர் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை அலுவலத்தில் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிபவர் ரமேஷ் (58). இவர் நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்றார்.

‘‘உயர் அதிகாரிகள் நெருக்கடியால், தனது கணவர் தற்கொலைக்கு முயன்றார்,’’ என அவரது மனைவி தமிழ்ச்செல்வி புகார் தெரிவித்தார். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரமேஷின் உறவினரான பாலசுப்ரமணியன் என்பவர், ரமேஷ் தற்கொலை முயற்சிக்கு காரணமானோரை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி நேற்று தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவரைத் தடுத்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in