வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த49 பேருக்கு கரோனா தொற்று இல்லை

வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த49 பேருக்கு கரோனா தொற்று இல்லை
Updated on
1 min read

பிரிட்டன் நாட்டில் புதியவகை கரோனா தொற்று பரவி வருவதால், அந்நாட்டில் இருந்து சமீபத்தில் இந்தியா வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 15-ம் தேதிக்குப்பின்னர், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஈரோடு வந்த 49 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு மேற்கொள்ளப் பட்ட பரிசோதனை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 49 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். எனவே, வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்தவர்கள், எவ்வித தயக்கமும் இல்லாமல், கரோனா பரிசோதனை மேற்கொள்ள முன் வர வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in