

சேலம் மாநகர காவல் துறை, மாவட்ட சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் ஆகியோருடன் இணைந்து, சேலத்தில் 3 தனிப்படை அமைத்து குழந்தைத் தொழிலாளர் உள்ளிட்டோர் தொடர்பான தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதில், சேலத்தில் பிச்சையெடுத்த 11 குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் 38 பேரை மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் சேலம் தொன்பாஸ்கோ அன்பு இல்லத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக் குழுமத்தில் சேர்த்தனர்.
மேலும் விசாரணை நடத்தி, மீட்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.
இதனிடையே, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை காணாமல் போனதாக நிலுவையில் இருந்த வழக்கில் 5 குழந்தைகளை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.