

தமிழக முதல்வர் கே.பழனிசாமி வரும் ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல்விரைவில் நடைபெறவுள்ளதையடுத்து முதல்வர் கே.பழனிசாமி ‘வெற்றி நடை போடும் தமிழகம்' என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நாமக்கலில் நேற்று தொடங்கினார்.
ஜனவரி 3-ம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். 9 மணி முதல் 9.45 வரை கோவில்பட்டி தொகுதி வில்லிசேரியில் பருத்திவிவசாயிகளுடன் கலந்துரையாடல், 10 மணி முதல் 11 வரை கோவில்பட்டியில் பொதுக்கூட்டம், 11.15 மணி முதல் 11.45 வரை பேருந்து நிலையம் அருகே சிறுவணிகர்களுடன் சந்திப்பு ஆகியநிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற் கிறார்.
பகல் 12.15 மணி முதல் விளாத்திகுளம் தொகுதி, மாலை 4.30 மணிமுதல் 5 மணி வரை ஓட்டப்பிடாரம்தொகுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
மாலை 6.30 மணி முதல் 7.45 மணிவரை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் சாலையில் பயணிப்பவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுக்கூட்டம், இரவு 8 மணி முதல் 8.30 வரை தூய பனிமய மாதா பேராலயத்தில் வழிபாடு, 8.45 மணி முதல் 9.30 வரைதூத்துக்குடி டிஎஸ்எப் தங்கும் விடுதியில் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், இரவு 9.45 முதல் 10.15 வரை மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
2-ம் நாளான ஜனவரி 4-ம் தேதி மாலை 4 மணி முதல் 4.30 வரை வைகுண்டம் தொகுதிகருங்குளத்தில் வேளாண் மக்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மாலை 6.45 மணி முதல் 7.15 வரை திருச்செந்தூர் தொகுதி வீரபாண்டியன்பட்டினத்தில் மீனவ சமுதாய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 வரைதூத்துக்குடியில் செய்தியாளர் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் செய்து வருகின்றனர்.
பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழா
சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம், அவரது திருவுருவச் சிலையுடன் அமைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரால் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழா ஜனவரி 4-ம் தேதி நடைபெறுகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மணிமண்டபத்தை திறந்து வைக்கின்றனர்.