மதுரையில் இயங்கிய தனியார் நிறுவனம் ரூ.50 லட்சம் மோசடி தி.மலை மாவட்ட எஸ்பியிடம் கிராம மக்கள் புகார்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பணம் மோசடி செய்யப்பட்டதாக கூறி மனு அளித்த விண்ணமங்கலம் கிராம மக்கள்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பணம் மோசடி செய்யப்பட்டதாக கூறி மனு அளித்த விண்ணமங்கலம் கிராம மக்கள்.
Updated on
1 min read

மதுரையில் இயங்கி வந்த ஒருதனியார் நிறுவனத்தில் செலுத்திய ரூ.50 லட்சத்தை பெற்றுத்தர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆரணி அடுத்த விண்ணமங்கலத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராம மக்கள், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அரவிந்த்திடம் நேற்று முன்தினம் அளித்துள்ள மனுவில், “மதுரையில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் தவணை முறையில் மாதந்தோறும் 5 ஆண்டு களுக்கு பணம் செலுத்தினால், இறுதி நாளில் இரு மடங்கு பணம் கொடுக்கப்படும் என தெரிவித்து, எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 2 பெண் கள் பணம் வசூலித்தனர்.

அவர்களிடம் நூற்றுக்கும் மேற் பட்டவர்கள், மாதந்தோறும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை பணம் செலுத்தி உள்ளோம். 5 ஆண்டுகளுக் குப் பிறகு பணத்தை கேட்கும்போது, தர மறுத்துவிட்டார்கள். இதற்கிடையில், மதுரையில் இயங்கி வந்த நிறுவ னத்தை, அதன் பங்குதாரர்கள் மூடி விட்டது தெரியவந்தது. வேலூரில் இயங்கிய கிளை அலுவலகமும் மூடப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு நிறுவனம் மூடப்பட்ட பிறகும், 2017, 2018-ம் ஆண்டுகளில் எங்களிடம் இருந்து 2 பெண் முகவர்கள் பணத்தை வசூலித்துள்ளனர்.

இதுகுறித்து வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிடம் முறையிட்டபோது, பணத்தை கொடுக்க முடியாது, அதற்கு ஈடாக நிலம் கொடுக்கிறோம், அந்த நிலங்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், சிதம்பரத்தில் உள்ளது என தனியார் நிறு வனத்தின் நிர்வாகி கள் கூறிவிட்டுசென்றனர். பின்னர், அவர்களை தொடர்புகொள்ளமுடிய வில்லை.

இந்த மோசடி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் உரிய நடவடிக்கை எடுத்து, நாங்கள் கட்டியரூ.50 லட்சம் பணத்தை பெற்றுத்தர நடவ டிக்கை எடுக்க வேண் டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in