

நாமக்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுமியை நந்தேஸ்குமார் (18) என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக சிறுமியின் பெற்றோர் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நந்தேஸ்குமார் (18), அவருக்கு உடந்தையாக இருந்த மல்லூரைச் சேர்ந்த கோகுலகண்ணன் (23), சேடப்பட்டியைச் சேர்ந்த மணி (55), புதூரைச் சேர்ந்த காந்திமதி (43), மின்னாம்பள்ளியைச் சேர்ந்த நந்தினி ( 27 ) மற்றும் 17 வயதுடைய நபர் என மொத்தம் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது நபர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்.