குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் முன்னீர்பள்ளம் நெல்லைநகர் மக்கள் மனு

பணி  நிரந்தரம் செய்யக் கோரிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர்கள். 			           படங்கள்: மு.லெட்சுமி அருண்
பணி நிரந்தரம் செய்யக் கோரிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர்கள். படங்கள்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகேயுள்ள நெல்லைநகர்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: நெல்லைநகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக குடிநீர், சாலை,கழிவு நீரோடை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் இப்பகுதியில்குடியிருக்கும் நூற்றுக்கும்மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பலமுறை அரசுத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நெல்லைநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் அளித்த மனுவில், “குடிநீர் வடிகால் வாரியத்தில் 10 ஆண்டுகள் பணி செய்த ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்களை தலைமைச் செயலாளரின் அரசாணைப்படியும், நீதிமன்ற உத்தரவுப்படியும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை தாலுகா திம்மராஜபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஆயிரம் யாதவ் மனைவி ஆ.வள்ளி அளித்த மனுவில், “பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் 2-ம் ஆண்டு படித்து வரும் எனது மகன் ராமானுஜத்தின் மருத்துவ படிப்புக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in