புத்தகத் திருவிழா திருப்பூரில் தொடக்கம்

புத்தகத் திருவிழா திருப்பூரில் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை பாரதி புத்தகாலயம், திருப்பூர் பின்னல் புத்தக அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா, திருப்பூரில் நேற்று தொடங்கியது.

வரவேற்புக் குழுத் தலைவர் மோகன் கார்த்திக் தொடங்கி வைத்தார். திருப்பூர் புத்தகத் திருவிழா முன்னாள் தலைவர்கள் எம்பரர் வி.பொன்னுசாமி, எம்.ஜீவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருப்பூரில் கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா, கரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் 2021-ம் ஆண்டு நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, எளிய முறையில் புத்தகங்களோடு புத்தாண்டை கொண்டாடுவோம் என்ற முழக்கத்தோடு திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா கடந்த 27-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் குறைந்தபட்சம் ரூ.500-க்கு புத்தகங்கள் வாங்கினால் கூடுதலாக ரூ.500-க்கு புத்தகங்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in