

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம்- பொன்னேரி- பழைய பேருந்து நிலையத்தில், செல்லூர் ராஜூக்கு எதிராக தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு யாதவ மகா சபையின் நிர்வாகிகள், தொண்டர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், “அமைச்சராக பதவி வகிக்கும் ஒருவர், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை அவதூறாக பேசியது அப்பட்டமான விதிமீறல். ஆகவே, சாதிப் பிரச்சினையைத் தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை தமிழக முதல்வர் உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும். தவறும்பட்சத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அமைச்சர் செல்லூர் ராஜூ டெபாசிட் இழக்கும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்’’ என தெரிவித்தனர்.