லாட்டரி வியாபாரிகளிடம் ரூ.6 கோடிக்கு ஆவணங்கள் பறிமுதல்

லாட்டரி வியாபாரிகளிடம் ரூ.6 கோடிக்கு ஆவணங்கள் பறிமுதல்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில், எஸ்பி.ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆன் லைன் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 22 நபர்களை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த முருகநாதன் (53), முடிச் சூரைச் சேர்ந்த சையத்அலி (47) ஆகியோரை கைது செய்து, விழுப்புரம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் காவல்துறையினர் விசாரிக்க நீதிமன்றம் 4 நாட்கள் அனுமதி அளித்தது. விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் மாலை இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணை குறித்து போலீஸார் கூறுகையில், "இருவரும் தமிழகம்முழுவதும் லாட்டரி விற்பனைக்காக பல முகவர்களை நியமனம் செய்துவருவாய் ஈட்டியுள்ளனர். இந்த வரு வாயில் வாங்கிய சொத்து, பங்கு சந்தை முதலீடு , வங்கி வைப்புநிதி உள்ளிட்ட ரூ. 6 கோடி மதிப்பிலான பல வகை ஆவணங்கள், ரூ. 30 லட்சம் மதிப்பில் கார் பறிமுதல் செய்யப்பட்டது. 33 வங்கி கணக்கு மூலம் ரூ. 1.50 கோடி மதிப்பில் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது" என்று தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in