சிதம்பரம் நடராஜர் கோயிலில் கஜ பூஜை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கஜபூஜை நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கஜபூஜை நடந்தது.
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர்கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கஜபூஜை நடந்தது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனகடந்த 21ம் தேதி கொடியேற் றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் 6- வது நாள் உற்சவம் நடைபெற்றது. அன்றிரவு கோயில் யாகசாலை அருகே கஜ பூஜை நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வரர் தீட்சிதர் யானைக்கு வெண்பட்டு, மலர் மாலைகள் சாத்தி சர்வ அலங்காரத்துடன் சந்தனம், குங்குமம் மற்றும் வாழைப்பழம், பூஜை பொருட்கள் வைத்து தீபாராதணை காட்டி படையல் செய்தார்.

இதனை தொடர்ந்து யானை பஞ்சமூர்த்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்று மலர்களை தூவியது. கஜ பூஜை நிறைவடைந்தவுடன் யானை வாகனத்தில் பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திரு விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வரு கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in