

திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி. இவரது தந்தை 2 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். தாயாருடன் வசிக்கிறார். கடந்த 25-ம் தேதி நல்லூரில் நடந்த தீபத் திருவிழாவுக்கு அவரது தாயார் சென்ற நிலையில், தனியாக இருந்த 5 வயது சிறுமிக்கு அப்பகுதியைச் சேர்ந்த சக்தி (50) என்பவர் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் சக்தியைக் கைது செய்தனர்.