

தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எழுச்சி பெற்றுள்ளது என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனைப் பொறுக்காத நாத்திகவாதிகள், நக்சலைட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்து ஒற்றுமையை உடைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள அத்தனை பேரும் கடவுள் மறுப்பாளர்கள். அதனால், திமுக கூட்டணி தேர்தலில் தோற்க வேண்டும். அதற்காக மக்களிடம் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர். அவரது கொள்கையை அறிவித்த பின்னர் அவரது கட்சி தொடர்பாக இந்து முன்னணி கருத்து தெரிவிக்கும், என்றார்.
பேட்டியின்போது, மாநில செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்டத் தலைவர் சந்தோஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.