

தூத்துக்குடி ஜெய்லானி நகரைச் சேர்ந்த அந்தோணி ரமேஷ் மகன் சூர்யா(14). இவர், திருநெல்வேலி தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வந்திருந்தார். மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயில் அருகே தாமிரபரணி ஆற்றில் நேற்று குளித்தபோது திடீரென்று மூழ்கி உயிரிழந்தார்.