

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மகேந்திர பிரபு தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் சு.சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தே. முருகன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாகவுள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
கணினி உதவியாளர் மற்றும் தூய்மை பாரத இயக்க ஒருங் கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.