

உளுந்தூர்பேட்டை அடுத்த பாலிகிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்தி ரன், விவசாயி. இவரது மகள் சமீரா(8), மகன் யோகேஷ் (6). இருவரும் அதே பகுதியில் 3 மற்றும் முதல்வகுப்பு படித்து வந்தனர். நேற்று இருவரும் அதே கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். வெகு நேரத்துக்குப் பிறகு பெற்றோர் குழந்தைகளை காணாமல் தேடியபோது குளத்தில் மிதந்தது தெரிய வந்தது.
இதையடுத்து உளுந்தூர் பேட்டை தீயணைப்பு படையினர்சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக் காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எடைக் கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மூழ்கி
மாணவர் உயிரிழப்பு
இவர் அயன் வேலூர் கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஏனாதி மங்கலம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் நேற்று குளித்தார். அப்போது எதிர்பாரதவிதமாக ஆற்றில் மூழ்கினார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் பரத்தை இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.