

மதுரை ஒத்தக்கடையில் அகில இந்திய விவசாயத் தொழிற்சங்கத்தின் சார்பில் வெண்மணி தியாகிகளின் 52-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் பாலுச்சாமி, ஒன்றியத் தலைவர் அழகர்சாமி, ஒன்றியச் செயலாளர் மச்சராஜா, பொருளாளர் கார்த்திகைசாமி, மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.