

மதுரை கருப்பாயூரணி அருகே யுள்ள காளிகாப்பானைச் சேர்ந் தவர் திருநாவுக்கரசு (61). இவரது சொந்த ஊர் மலம்பட்டி. காளிகாப்பான் வீட்டில் வெள்ளி விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு வந்தார்.
கடந்த 15-ம் தேதி அவர் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் வீட் டுக்குள் சென்று பார்த்த போது, வெள்ளி விநாயகர் சிலை, ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் ஒத்தக்கடை போலீஸார் விசாரிக்கின்றனர்.