

பொறியியல் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு அரசுத் துறை களில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் முனைவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத் தலைவர் விஜயகுமார் கூறியதாவது:
அண்ணா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பலரின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது. தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் பொறியியல் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களில் பலர் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு மற்றும் ஊதியமின்றி உள்ளனர்.
வேலைவாய்ப்புக்காக தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வி பெற்றிருந்தும் கூட, சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் நிலையுள்ளது.
அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழு மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட வழிகாட்டுதலில், பொறியியல் முனைவர் பட்டம் பெற்றவர்களை பல்கலைக் கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளில், நேரடி பணி நியமனம் செய்ய வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் துறையில் 1,600 காலிப்பணி யிடங்கள் உள்ளன. இது தவிர பிற துறைகளில் அரசின் தொழில்நுட்ப ஆலோசர்கள் பதவிகளுக்கான வாய்ப்பும் உள்ளன.
எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகிய வற்றில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், கல்லூரி முதல்வர் பணியிடங்களில் பொறியியல் முனைவர் பட்டம் பெற்றவர்களை நியமிக்க வேண்டும்.
இதேபோல அரசின் பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
ஆந்திராவில் அம்மாநில அரசு கல்லூரிகளில் பி.எச்டி பட்டதாரிகளை அரசுத் துறை களில் பணி அமர்த்தி உள்ளார். இதேபோல, பிஹார் மாநிலத்தில் பொறியியல் முனைவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளித்து பணிகளை வழங்கி வருகிறது. இதேபோல தமிழகத்திலும் அரசு வேலை வாய்ப்புகளை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.