முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிராம், ஒன்றிய விவசாய அணி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தனர்.

நகர பொதுச் செயலாளர் முருகேசன், செயலாளர்கள் கார்த்தி, மணிகண்டன், மாவட்ட விவசாய அணி தலைவர் பொன்ராஜ், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் நடராஜன் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மகாராஜன், மண்டல தலைவர் ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன், ஒன்றிய தலைவர் முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆலங்குளத்தில் ஒன்றிய தலைவர் பண்டரிநாதன் தலைமையில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா நடைபெற்றது. மாவட்ட பார்வையாளர் அன்புராஜ், மண்டல பொதுச் செயலாளர்கள் லிங்கவேல்ராஜா, குமரகுருபரன், பொருளாளர் சுபிஷ், மாவட்ட துணைத் தலைவர் அண்ணாவி ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கீழப்புலியூர், தென்காசியில் வாஜ்பாய் படத்துக்கு மாவட்ட தலைவர் ராமராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலட்சுமி, மண்டல பார்வையாளர் ஆனந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சிப் பிரிவு அணி மாவட்டத் தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுரண்டையில் நடைபெற்ற விழாவில் 100 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் ராஜா வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in