திருப்பூர் மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தின அமைதி ஊர்வலம்

திருப்பூர் மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தின அமைதி ஊர்வலம்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி, திருப்பூரில் மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 33-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூரில் மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் குமரன்சிலை அருகில் இருந்து டவுன்ஹால், குமரன் சாலை வழியாக மாநகராட்சி சந்திப்பு வரை நேற்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் திரண்ட அதிமுவினர், கறுப்பு சட்டை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். பேரணியின் போது, பூங்கா சாலை பிரிவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையஅனைவரும் பாடுபட வேண்டும்என உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. திருப்பூர் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான சிவசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு) உள்ளிட்ட நிர்வாகிகள்,உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in