

மதுரை மாவட்டம் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் வியாழக்கிழமை தோறும் நடைபெறுகிறது. மதுரை விற்பனைக் குழுச் செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமையில் தேங்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 6 விவசாயிகளின் 8,840 தேங்காய்கள் ஏலத்தில் விடப்பட்டன. 4 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.இதில் அதிகபட்சமாக ஒரு தேங்காய் விலை ரூ.11-க்கும், குறைந்தபட்சமாக ரூ.10-க்கும், சராசரியாக ரூ 10.58-க்கும் ஏலம் போனது. இதற்குரிய தொகை ரூ.93,600 வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.