பழநி தைப்பூச விழா ஜன.22- ல் தொடக்கம்

பழநி தைப்பூச விழா ஜன.22- ல் தொடக்கம்
Updated on
1 min read

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா ஜன.22 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது.

விழாவின் ஏழாம் நாள் தைப்பூசத்திருவிழா அன்று மாலையில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. ஜன.31-ம் தேதி தெப்பத் தேருடன் கொடி இறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடையவுள்ளது.

தைப்பூச திருவிழா குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி முன்னிலை வகித்தார். அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்து அறநிலையத் துறை ஆணையரால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள், பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இன்றி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in