நகை, சொத்துகளை உறவினர் ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாக உடல்நலம் பாதித்த மகனுடன் எஸ்.பி. யிடம் புகார் அளித்த மூதாட்டி

நகை, சொத்துகளை உறவினர் ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாக உடல்நலம் பாதித்த மகனுடன் எஸ்.பி. யிடம் புகார் அளித்த மூதாட்டி
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் நம்பியூர் நிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்ற மூதாட்டி, உடல் நலம் பதித்த தனது மகன் சோமசுந்தரத்துடன் ஆம்புலன்சில் வந்து எஸ்.பி. தங்கதுரையை சந்தித்து மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:

நம்பியூர் நிச்சம் பாளையம் பகுதியில் உடல்நலம் பாதித்த மகனுடன் வசித்து வருகிறேன். எனது மாமனார் பொங்கிய மூப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். எனது கணவர் மாரிமுத்து, மாமியார் கருப்பாயி அம்மாள் ஆகியோர் கடந்த 2006 ஆண்டு இறந்து விட்டனர்.

எங்கள் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் உறவினர் ஒருவர், மறைந்த கருப்பாயி அம்மாளை ஏமாற்றி, எங்களுக்கு சேர வேண்டிய பணம், நகைகளை எடுத்துக் கொண்டார். இதுகுறித்து 2015-ல் நம்பியூர் போலீஸில் புகார் செய்தேன். அவர்கள் விசாரணை நடத்தியபோது, எங்களுக்கு சேர வேண்டிய பணத்தையும், சொத்துகளையும் திருப்பித் தருவதாக கூறினார்.

ஆனால், அதன்படி திருப்பித் தரவில்லை.

தற்போது எனது மகன் சோமசுந்தரம் உடல்நிலை மிகவும் பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவச் செலவுக்கு உதவும் வகையில், எங்களுக்கு சேர வேண்டிய சொத்தினைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in