

தூத்துக்குடியில் தாட்கோ மூலம் ரூ.251.21 கோடி மதிப்பீட்டில் 100 ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை அவர் ஆய்வு செய்தார். ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் மக்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்று சுற்றுலா வாகனம் வாங்கி தொழில் செய்யும் பழங்குடியினத்தை சேர்ந்த மாரியப்பன், ஆட்டோக்கள் வாங்கி இயக்கும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ஜவகர் ஆகிய பயனாளிகளை பார்வையிட்டு, அவர்களது தொழில்கள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது தாட்கோசென்னை பொது மேலாளர் அழகுபாண்டியன், திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் பால்ராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் ஸ்டெல்லாபாய் ஆகியோர் உடனிருந்தனர்.