வெள்ளாளர் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

வெள்ளாளர் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

திண்டுக்கல்லில், திருச்சி சாலையில் உள்ள வ.உ.சி. சிலை முன்பிருந்து ஊர்வலமாகச் சென்றவர்கள் பழநி சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநிலத் தலைவர் பழனிச்சாமி, கவுரவத் தலைவர் ஜோதிமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அமைப்பின் மாவட்டத் தலைவர்கள் கார்த்திகேயன் (கிழக்கு), சண்முகபிரபு (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்துப் பிள்ளைமார்கள், கவுண்டர்கள், முதலியார்கள், வெள்ளாளச் செட்டியார்கள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். வெள்ளாளர் பெயரைத் தாரை வார்க்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டிப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in