

திருச்செந்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், திருச்செந்தூர் தெப்பக் குளம் அருகில் 5.75 அடி உயர தமிழ்த் தாய் கற்சிலை பொதுமக்கள் பார்வைக்காக கடந்த 20-ம் தேதி முதல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 48 நாட்கள் இச்சிலை வைக்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் விசயராகவன் குடும்பத்துடன் திருச்செந்தூர் வந்து, தமிழ்த் தாய் சிலைக்கு பச்சை நிற பட்டு மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் சம்சுதீன், மண்டல துணை வட்டாட்சியர் பாலசுந்தரம், தமிழ் சங்க நிறுவன செயலாளர் ராமகிருஷ்ணன் உடனிருந்தனர்.
செய்தியாளர்களிடம் விசயராக வன் கூறும்போது, “தமிழ்த் தாய் சிலையை நிரந்தரமாக நிறுவ இடம் தேர்வு செய்யப்படும். அனைத்துமதத்தினரும் தமிழ்த் தாயை வணங்கலாம். தமிழ்த் தாய் என்பது ஒரு பொது சமரச இறை தத்துவம் கொண்ட ஒரு கடவுள்” என்றார் அவர்.