கள்ளக்குறிச்சியில் வடக்கு மண்டல ஐஜிஆய்வு

கள்ளக்குறிச்சியில் வடக்கு மண்டல ஐஜிஆய்வு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பி.நாகராஜ் வருகை தந்தார். மாவட்ட காவல்துறையின் தனிப்பிரிவு அலுவலகத்தை பார்வையிட்டார். அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட காவல் அலு வலகத்தில் இயங்கும் மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, தொழில்நுட்ப பிரிவு, ஆயுதப்படை மற்றும் அமைச்சு பணியாளர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அந்தந்த அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

ஆய்வின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஜியாவுல்ஹக், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் சக்தி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in