

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு முதலாம் ஆண்டு மாணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று பரவியது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டது.
இதில் மதுரை அரசு மருத் துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் திருச்சி மாணவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப் பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அனைத்துப் பேராசிரியர்கள், விடுதி வார்டன், விடுதியில் தங்கியிருந்த மாணவர் களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் பல மாணவர்களுக்கும் தொற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து டீன் சங்குமணி கூறும்போது, ஏற்கெனவே ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இப்போது மேலும் ஒரு முதலாம் ஆண்டு மாணவருக்கு அறிகுறி இல்லாத கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.