கோவை - ஜெய்ப்பூர் இடையேசேலம் வழியாக சிறப்பு ரயில்

கோவை - ஜெய்ப்பூர் இடையேசேலம் வழியாக சிறப்பு ரயில்
Updated on
1 min read

சென்னை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் வழியாக கோவை- ஜெய்ப்பூர் இடையே முழுவதும் முன்பதிவு கொண்ட வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்- கோவை இடையே வாராந்திர அதி விரைவு ரயில் (எண்- 02970), இன்று (22-ம் தேதி) முதல் ஜனவரி 26-ம் தேதி வரை செவ்வாய் கிழமை தோறும் இயக்கப் படுகிறது. ஜெய்ப்பூரில் மாலை 7.35 மணிக்குப் புறப்பட்டு, வியாழன் மாலை 4.50 மணிக்கு கோவை வந்தடையும்.

கோவை- ஜெய்ப்பூர் இடையே (எண்- 02969) வரும் 25-ம் தேதி தொடங்கி ஜனவரி 29-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் காலை 9.25 மணிக்கு புறப்பட்டு ஞாயிறு காலை 6.45 மணிக்கு ஜெய்பூரை சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in